தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அதனால் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜாவான் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் பிளஸ் டூவில் அதிக மார்க் வாங்கவில்லை. ஆனால் கல்லூரியில் சேர்வதற்காக லயோலா கல்லூரி உள்ளிட்ட மொத்த மூன்று கல்லூரிகளில் அப்ளிகேஷன் வாங்கினேன்.
அன்று இரவு என் அப்பா வீட்டில் குடித்து கொண்டிருந்தார் என்று விஜய் சேதுபதி சொன்னது மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து சரக்கு அடிப்பதற்கெல்லாம் கை தட்டாதீங்க. அது கெட்ட பழக்கம். அப்படி பழகிட்டாங்க அதை ஸ்டைல் என நினைக்காதீங்க. இப்படி பேசுவதால் நான் குடிப்பதில் என்று நினைக்காதீங்க, நானும் குடிப்பேன். தற்போது இருக்கும் வியாபார உலகம் உங்கள் நேரத்தை திருட பார்க்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற பொய்யான சுதந்திரத்தை கொடுக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.