மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மூதாட்டி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் 60 வயதுடைய முனியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனியம்மாள் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேரனின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்ப புறப்பட்டு பூசனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முனியம்மாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென பழுதாகி விட்டதால் சாலையின் நடுவில் கவிழ்ந்து விழுந்து விட்டது.
இதில் கீழே விழுந்த முனியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.