Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அது சரி இல்ல…. பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அழகாபுரி பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தங்கம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தங்கம்மாள் மண்ணெண்ணெய் எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய வேல்முருகன் தனது மனைவி உடல் முழுவதும் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.

அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தங்கம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |