Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிகமா தண்ணீர் வருது…. படகு போக்குவரத்து நிறுத்தம்…. தண்டோரா மூலம் எச்சரிக்கை….!!

காவிரியில் தண்ணீர் அதிகமாக வருவதால் படகு போக்குவரத்தானது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு இடையில் காவிரி ஆற்றில் படகு போக்குவரத்தானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பும் நிலையில் இருப்பதாலும், காவிரி ஆற்றில் அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி வருவாய்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் படகு போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதன் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இவ்வாறு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நெரிஞ்சிப்பேட்டையில் இருந்து  பூலாம்பட்டிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பொதுமக்கள் செல்கின்றனர். எனவே மறு உத்தரவு வரும் வரை படகு போக்குவரத்து இயங்காது என்று பேரூராட்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பேரூராட்சி துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |