முன்விரோதம் காரணமாக ஒருவரை நான்கு பேர் இணைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பிரசாந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தியா என்ற ஒரு மனைவி இருக்கின்றார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் திலகர் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் திலகர் அவரது நண்பர்களான விமல், புல்லட் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றிணைந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பிரசாந்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பிரசாந்தின் மனைவியான சந்தியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் விமல், திலகர், புல்லட், ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.