டாஸ்மாக் கடைகள் இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் சுகந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று ஆடிப்பெருக்கு விழா என்பதால் பொதுமக்கள் கூட்டமாகச் சென்று மேட்டூரில் உள்ள நீர்நிலைகளில் குளிப்பதற்காக செல்வது வழக்கம்.
ஆனால் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடினால் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது என ஆற்றில் குளிப்பதற்கும், பூங்காவிற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் என்பவர் முக்கியமான இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை இன்று ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரநாதன் சங்ககிரி பகுதியில் முக்கியமான இடங்களில் இயங்கும் 9 மற்றும் மேட்டூரில் இயங்கும் 13 டாஸ்மார்க் கடைகளை இன்று ஒரு நாள் மட்டும் மூடுப்படுவதாக தெரிவித்துள்ளார்.