அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் இளவரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இளவரசன் தனது வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது இளவரசனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல் துறையினர் மருவத்தூர் பகுதியில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த இருவரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது இந்த மோட்டார் சைக்கிள் இளவரசனுக்கு சொந்தமானது என்பதை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் மருதூர் கிராமத்தில் வசிக்கும் விக்னேஸ்வரன், துரைப்பாண்டி, மணிகண்டன், மற்றும் சரத்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் ஏற்கனவே திருடிச் சென்ற 4 மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷ்வரன், துரைப்பாண்டி, மணிகண்டன் மற்றும் சரத்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.