அதுல்யா பிரபல நடிகரின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகை அதுல்யா ரவி ”காதல் கண் கட்டுதே” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் ”முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாணுடன் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெயரிடப்படாத இந்தப் படம் ஆக்ஷன் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.