கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு அரசு மேனிலைப் பள்ளியில் 177-வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலகில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
கல்வி எனும் ஆயுதத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியது போன்று உலகிலேயே சிறந்த ஆயுதம் கல்வி தான். அதனை மாணவர்கள் கையில் எடுங்கள். அதன்பின் உங்களை வளர்த்த தாய்க்கு நன்றி சொல்லுங்கள். மேலும் உதவியவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என மாணவர்கள் மத்தியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.