Categories
அரசியல்

அடிச்சாச்சு…. அட்வைஸ் பண்ணியாச்சு…. இனி பஞ்சர் தான்….. அதிரடி காட்டும் சப்-கலெக்டர்….!!

144 தடையை மீறி வெளியே இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிவோரின் டயரில் உள்ள காற்றை பிடுங்கி விட்டு தமிழகத்தின் ஒரு பகுதியில் சப் கலெக்டர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் மதித்து தங்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வருகின்றனர். ஆனால் சிலரோ கொரோனா குறித்த அச்சம் கொஞ்சம் கூட இல்லாமல்,

தேவையில்லாத காரணங்களை வைத்துக் கொண்டு வெளியில் சுற்றித் திரிந்து இருசக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியரும், காவல் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நூதன முறையில் தண்டனை அளித்து வருகின்றனர்.அந்த வகையில்,

தமிழகத்தில் ஒரு பகுதியில் வெளியில் சுற்றி திரிந்தவர்களின் டயர்களில் காற்று இறக்கிவிட்டு பின் அவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் தனித்தனியாக ஒன்றுதிரட்டி கொரோனா குறித்த அறிவுரையை எளிதாக வழங்கி மீண்டும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தினார். காற்றை பிடுங்கி உங்களைத் துன்புறுத்துவது உங்களது நல்லதுக்காகத்தான். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் வெளியில் வர யோசிப்பீர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |