தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வாரிசு படத்தின் போஸ்டர்களை மெட்ரோ ரயில்களில் ஒட்டும் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
The Boss Returns 🔥
Chennai Metro Carries #Varisu 🚝🔥#Varisu in theatres near you from Pongal 2023 😊#Thalapathy @actorvijay @SVC_official @directorvamshi@iamRashmika @MusicThaman@Jagadishbliss #VarisuPongal 🔥 pic.twitter.com/uLdsSd0xiR
— Seven Screen Studio (@7screenstudio) December 12, 2022