பெங்காலி நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் பினோதினி தாசி. இவர் தேவதாசி குடும்பத்தில் பிறந்து 9 நூற்றாண்டில் ஏராளமான நாடகங்களில் நடித்து இருக்கிறார். பெங்காலியில் இவரை டோடி பினோதினி என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவரது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் பினோதினி கதாபாத்தில் கங்கான ராணாவத் நடிக்கிறார். பர்ணிதா மருதாணி போன்ற சிறந்த படங்களை இயக்கி பெயர் பெற்ற பிரதீப் சர்க்கார் பினோதினி வாழ்க்கை படத்தை டைரக்டு செய்கிறார்.
இது குறித்து கங்கனா ராணாவத் கூறியது, நாடு போற்றும் பெருமை பெற்ற பினோதினி சுயசரிதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் பிரதீப் சர்க்கார் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. இப்பொழுதும் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மணிகர்ணிகா, தலைவி இப்போது நடித்துவரும் எமர்ஜென்சி படங்களுக்கு பிறகு கங்கனா நடிக்கும் 4 வது பயோபிக் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.