அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இன்று ஒரு நாளாவது அவர்களது பணிகளில் நேர்மையாக செய்ல்ப்பட்டு வாக்குப்பதிவினை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள்விடுத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார். அரியலூர் மாவட்டத்திலுள்ளா அங்கனூர் எனும் கிராமத்தை சேர்ந்த இவர் இன்று காலை அங்கனூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் , தற்போது தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது.சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியுள்ளது.சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்தரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு விழுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன.தேர்தல் அதிகாரிகள் இதுவரை ஆளும் அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இன்று ஒரு நாளாவது அவர்களது பணிகளில் நேர்மையாக செய்ல்ப்பட்டு வாக்குப்பதிவினை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள்விடுத்தார்.