Categories
தேசிய செய்திகள்

ATM இல்லாமல் UPI மூலம் பணம் எடுப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

டெபிட்கார்டு (அ) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்-களில் இருந்து பணத்தை எடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

# ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு, அங்கு திரையில் வரும் “பணத்தை திரும்பப் பெறு” விருப்பத்தை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

# அதன்பின் UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# அடுத்ததாக நீங்கள் ஏடிஎம் திரையில் QR குறியீட்டைக் காண்பீர்கள். தற்போது உங்களது ஸ்மார்ட் போனில் UPI பயன்பாட்டைத் திறந்து, ATM இயந்திரத்தின் திரையிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

# அதனை தொடர்ந்து உங்களது UPI பின்னை உள்ளிட்டு “ஹிட் ப்ரோசீட்” பட்டனைக் கிளிக் செய்யவேண்டும்.

# இவ்வழியில் நீங்கள் ஒரு நேரத்தில் 5,000 ரூபாய் வரையிலும் பணத்தை எடுக்கலாம். வங்கி யூபிஐ வாயிலாக ATMகளிலிருந்து கார்டு இன்றி பணம் எடுப்பதற்கு கூடுதலான கட்டணமில்லை.

Categories

Tech |