Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ATM மையத்திற்குள் திருட நுழைந்த நபர்…. சட்டென்று அடித்த அலாரத்தால் தப்பிய பணம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, மாதம்பாளையம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியின் அருகில் ஏடிஎம் மையம் இருக்கிறது. இங்கு ஒரு பணம் எடுக்கும் இயந்திரம், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம், வங்கி வரவு செலவு கணக்கினை பிரிண்ட் செய்யும் இயந்திரம் போன்றவை இருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை மர்மநபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு முகத்தை துண்டால் கட்டிகொண்டு எடிஎம் மையத்தின் முன் புறம் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு உள்ளே சென்றார்.

இதையடுத்து அந்த நபர் உள்ளே இருந்த 2 கண்காணிப்பு கேமராவை பேப்பர் கொண்டு மறைத்துவிட்டு, ஏடிஎம் மெஷினை கடப்பாரையால் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்தார். அப்போது அலாரமடித்ததால் அந்நபர் அங்கு இருந்து தப்பிசென்றுவிட்டார். இந்த நிலையில் அலராம் அடித்த தகவலறித்து வந்த காவல்துறையினர் எடிஎம் மையத்தை பார்த்தபோது கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது.

அதன்பின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு கொள்ளை முயற்சி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஈரோட்டிலிருந்து வரவழைக்கபட்ட மோப்பநாய் ஜெர்ரி மோப்பம் பிடித்தபடி சிறிதுதூரம் ஓடி நின்றுவிட்டது. அத்துடன் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை முயற்சி பற்றி வங்கி மேலாளார் சதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை சத்தியமங்கலம் டி.எஸ்.பி ஜெயபால் தலைமையிலான காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |