ATM-ல் இருந்து கிழிந்தநோட்டு வரும் பட்சத்தில், நீங்கள் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்த தேதி, ஏடிஎம் இருக்கும் இடம் போன்றவற்றை கட்டாயம் நினைவில் வைத்திருக்கவேண்டும். அத்துடன் பணம் எடுத்த போது ATM-ல் இருந்து பெறப்பட்ட ஸ்டேட்மென்டை வைத்து இருந்தால் நல்லது. ஏனெனில் கிழிந்த நோட்டை வங்கியில் மாற்றுவதற்கு நீங்கள் இவ்விவரங்கள் அனைத்தையும் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஒரு வேளை உங்களிடம் பணம் எடுத்த ரசீது இல்லையெனில், பணம் எடுத்த போது மொபைலுக்கு வந்த மெசேஜை காட்டவேண்டும்.
ATM-களில் இருந்து பெற்ற கிழிந்த நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகளை ஆர்பிஐ வகுத்து இருக்கிறது. அந்த வகையில் ATM-ல் இருந்து கிழிந்த நோட்டுகள் வந்தால் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்கு சென்று அவற்றை மாற்றிக் கொள்ளலாம். ஆகவே ATM-களில் இருந்து பெறப்படும் சிதைந்த நோட்டுகளை மாற்றித்தருவதற்கு எந்த ஒரு வங்கியும் மறுப்பு கூறாது. எனினும் வங்கி ஊழியர்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற மறுத்தால் புகாரளிக்கலாம்.