Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி கட்டாயம்…. புதிய அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்பிஐ ஏடிஎம்-களில் 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஓடிபி எண்ணை உள்ளீடு செய்வதை கட்டாயமாக்கி உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தனியே ஓடிபி எண்ணை பெற்று பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

Categories

Tech |