கோவை ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்த பின் வரும் ஒப்புகைச் சீட்டை இந்தியில் இருப்பதைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹிந்தி தெரியாதவர்களுக்கு தங்களது கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்ற விவரம் தெரிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்திலும் இந்தியில் தான் உள்ளது என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றன. இதனால் தங்களது வங்கி இருப்பு நிலையை அறிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலாக உள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில்: தமிழ்நாட்டில் வங்கியை வைத்துக்கொண்டு இந்தியில் ஒப்புகைச்சீட்டு வழங்குவது கண்டனத்திற்குரியது. இந்தியன் வங்கி நிர்வாகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.