கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. ஆகவே நீங்கள் ATM (அ) கார்டு வாயிலாக பணப்பரிவர்த்தனை செய்தால் அதற்கு முன் எந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் கனரா வங்கி ATM பணம், POC மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கான தினசரி பரிவர்த்தனை வரம்பை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக வங்கி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் அளித்துள்ளது.
அத்துடன் இந்த புது விதிமுறைகள் உனதே நடைமுறைக்கு வர இருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. கிளாசிக் டெபிட்கார்டின் ATM பரிவர்த்தனை வரம்பை நாளொன்றுக்கு 40,000ல் இருந்து 75,000 ஆக வங்கி உயர்த்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிரத்து இந்த கார்டுகளுக்கான தினசரி பிஓஎஸ் வரம்பை ரூபாய்.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தவும் வங்கி முடிவுசெய்துள்ளது.
அத்துடன் பிளாட்டினம், பிசினஸ், டெபிட் கார்டின் பணப்பரிவர்த்தனை வரம்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்த வங்கி முடிவுசெய்துள்ளது. அதே நேரம் பிஓஎஸ்க்கான தினசரி பரிவர்த்தனை வரம்பை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.