டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை நிறுவனங்கள் பதிவு செய்யக் கூடாது என்ற ரிசர்வ் ரிசர்வ் வங்கியின் உத்தரவு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் விற்பனை தளங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள், பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவை பண பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிமாற்றத்தின் போது தானாக பதிவிடும் முறையை கையாளுகின்றனர்.
இது ஆபத்தானது என்பதால் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் ரிசர்வ் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதும் வாடிக்கையாளர் தனது கார்டின் எண், பெயர், காலாவதி தேதி, சிவிவி ரகசிய எண் ஆகிய விவரங்களை பதிவிட வேண்டியிருக்கும்.