ஏ.டி.எம் கார்டில் இருந்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ஓமன்ந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓமன்ந்த் வேடசந்தூர் ஏ.டி.எம் மையத்தில் 10 நாட்களுக்கு முன்பு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ஓமன்ந்த் அங்கு வந்த வாலிபர் ஒருவரிடம் தன்னுடைய பணத்தை ஏ.டி.எம்-யில் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அதன்பின் பணம் எடுத்துக் கொடுத்த வாலிபர் ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு கார்டை பறித்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து ஓமன்ந்தின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி 65 ஆயிரம் ரூபாயை அந்த வாலிபர் திருடியுள்ளார். இதுபற்றி ஓமன் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஓமன்ந்த் ஏ.டி.எம் கார்டை நாகம்பட்டி பகுதியில் வசிக்கும் ஆபேல் என்பவர் பயன்படுத்தி பணத்தை திருடியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் ஆபேல்லை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4 ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.