Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஏ.டி.எம். வாயில் கண்ணாடி உடைப்பு..!!

ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் நள்ளிரவு ஒரு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள எஸ் வங்கியின் ஏ.டி.எம். வாயில் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துள்ளார். அதனைப் பார்த்த ஏ.டி.எம். இரவுப்பணி காவலாளி அவரைப் பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலை நடைமேடையில் வசிப்பவர் என்றும் அவரது பெயர் யுவன் (35) என்பதும் தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரைக் காவல் துறையினர் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர்.

Categories

Tech |