Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி “திருவள்ளூரில் பரபரப்பு !!..

ATM  இயந்திரத்தை   உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை  கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு ஏடிஎம் மையங்களில்  ஒன்றை தேர்வு செய்த மர்ம நபர் ஒருவர்  நேற்று இரவு  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார் . அப்போது அலாரம் ஒலிக்க அங்கிருந்து தப்பிய மர்ம நபர், அருகிலுள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார்.

அங்கும் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி உள்ளார். அலாரம் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சோழவரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சியை கொண்டு கொள்ளையனை தேடிவருகின்றனர் .இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |