ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் கணக்கிற்கு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கிடைக்கும்.
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பல முறை பணப்பரிவர்த்தனை ரத்தாகிவிடும். ஆனால், அந்த தொகை நமது கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தருணங்களில் வங்கி தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கான பணத்தை கணக்கில் ஒருவாரங்களுக்குள் வங்கி செலுத்தியிருக்கவேண்டும்.
ஆனால், சில சமயங்களில் பணம் திரும்பக் கிடைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பலமுறை வங்கிக்கு அழைந்துதான் பணத்தை பெறவேண்டியுள்ளது. இதற்கு முடிவுகட்டும் வகையில் ஆர்பிஐ புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதன்படி சரியான நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அபராதம் செலுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் என்ற அளவில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.