ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தனியார் வங்கிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கி விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில் ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கு தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து ஆக்சிஸ் வங்கி கட்டணம் வசூலித்து வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி அடுத்த மாதத்திலிருந்து கட்டணம் வசூலிக்கப் உள்ளதாக அறிவித்துள்ளது. தனியார் வங்கிகளின் இத்தகைய முடிவுகளால் பெரும் சிரமங்கள் ஏற்படும் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.