உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ATMல் பணத்தை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, காவல்துறை பிக்கேப், கைத்துப்பாக்கி, காவல்துறை சின்னம் கொண்ட பொலேரோ கார் மற்றும் ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ATM-ல் இரும்பு தட்டை வைத்து விடுவது வழக்கம் ஆகும். அதன்பின் யாரேனும் ATMல் பணம் எடுக்க வந்தால், இவர்கள் வைத்திருக்கும் இரும்பு தகடு காரணமாக ஏடிஎம்மில் உள்ள டிஸ்பென்சர் ஷட்டருக்குள் பணம் சிக்கிக்கொள்ளும்.
இதனால் இயந்திரம் பழுதடைந்து விட்டது என நினைத்து பணம் எடுக்க வந்தவர்கள் சென்று விடுவார்கள். அதன்பின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் டிஸ்பென்சர் ஷட்டரைத் தூக்கி, இரும்பு தகட்டை நீக்கிவிட்டு பணத்தை வெளியே எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். போலீஸ் வேடமணிந்து ATM -களில் சோதனை நடத்த சென்றதாகவும், வாய்ப்பு கிடைத்தவுடன் இரும்பு தகட்டின் உதவியுடன் பணம் எடுத்ததாகவும் காவல்துறை விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டனர்.