தோல்வியடைந்த ஏடிஎம் பரிவர்த்தனைக்கு வங்கிகளிடம் இருந்து குறிப்பிட்ட நாளுக்கு பணம் வந்து சேராவிட்டால் இழப்பீடு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ATM மெஷின்களில் பணம் எடுக்கும் பலர் இந்தப் பிரச்சினையைச் சந்தித்திருப்பார்கள். பணப் பரிவர்த்தனை ரத்தாகிவிடும். ஆனால் அதற்கான பணம் அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கப்பட்டுவிடும். பணமும் வெளியே வராது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வதென்று பலருக்கு பிடிபடாது. இந்நிலையில் தோல்வியடைந்த ஏடிஎம் பரிவர்த்தனைக்கு வங்கிகளிடம் இருந்து குறிப்பிட்ட நாளுக்கு பணம் வந்து சேராவிட்டால் இழப்பீடு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்பிஐ விதிப்படி, தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு ஒரு வாரத்திற்கு அந்த தொகை வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், நாள் ஒன்று ரூ.100 என வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.