Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப சிரமமா இருக்கு…. எங்கையும் பணம் இல்ல…. போராட்டத்தால் பாதிக்கப்படும் வாழ்வு….!!

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

மத்திய அரசு இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், தர்ணா போராட்டம் போன்றவை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் நேற்றும், இன்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிகளில் பணப் பரிமாற்றம், செக் கிளியரன்ஸ் போன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் தங்களின் அவசரத் தேவைக்குப் பணம் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

Categories

Tech |