உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.செவல்பட்டி கிராமத்தில் குருவாயம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இதில் சதீஷ்குமாருக்கு உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.