Categories
டென்னிஸ் விளையாட்டு

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் …. சாம்பியன் பட்டம் வென்றார்….!!!

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார் .

ஏடிபி மனாமா சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பஹ்ரைனில்  தலைநகர் மனாமாவில்  நடைபெற்று வந்தது.இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், ரஷ்ய வீரரான கார்லோவ்ஸ்கியை எதிர்த்து மோதினார் . இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே  ராம்குமார் ஆதிக்கம் செலுத்தினார். இதில் முதல்  செட்டை 6-1 என்ற கணக்கில் வென்றார்.

இதையடுத்து 2-வது செட்டை  6-4  என்ற கணக்கில் வென்ற ராம்குமார், 6-1 , 6-4  என்ற நேர் செட்  கணக்கில் வெற்றி பெற்றார் .27 வயதான ராம்குமார் இதற்கு முன்பாக ஆறு ஏடிபி சேலஞ்சர்  இறுதிப் போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்தார் .இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தனது முதல் ஏடிபி சேலஞ்சர் நிலை ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.

Categories

Tech |