Categories
டென்னிஸ் விளையாட்டு

ஏடிபி டென்னிஸ் போட்டி : ரஷ்ய வீரர் டேனியல் மெட்விடேவ் அதிர்ச்சி தோல்வி ….!!!

ஏடிபி டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் டேனியல் மெட்விடேவ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது .இப்போட்டியில் முன்னணி டென்னிஸ் வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது .இந்நிலையில் இத்தொடருக்கு முன்பாக ஏடிபி  டென்னிஸ் போட்டி தற்போது நடந்து வருகிறது .இதில் முன்னணி வீரர்கள் தங்கள் நாட்டின் சக வீரர்களுடன் குழுவாக இணைந்து விளையாடி வருகின்றனர் .

இதில் இன்று சிட்னியில் நடைபெற்ற போட்டியில் எதிரான போட்டியில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெட்விடேவ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலகின் 2-ம் நிலை வீரரான டேனியல் மெட்விடேவ், தரவரிசையில் 35-வது இடத்தில் இருக்கும் உகோ ஹம்பர்டிடம் தோல்வி அடைந்தார் .இதில் முதல் செட்டை 6-7  என்ற கணக்கில் இழந்த உகோ ஹம்பர்ட், இதன் பிறகு அதிரடியாக விளையாடி 7-5, 7-6  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Categories

Tech |