ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 65) என்பவர் சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே சிக்கன் பக்கோடா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று முதியவர் கலியமூர்த்தி காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.அப்போது ஆற்றில் நிலைதடுமாறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கினார் .
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் காவிரி ஆற்றங்கரையில் ஒதுங்கி கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.