Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. யாரும் இறங்க வேண்டாம்…. வருவாய் துறையினரின் வேண்டுகோள்….!!.

பொன்னை ஆற்றங்கரை அருகில் இருக்கும் கிராம மக்கள் ஆற்றுப் பகுதியில் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் கேட்டுகொடுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் மழை பெய்து அங்குள்ள கலவகுண்டா உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாற்றில் பரவலாக வெள்ளம் வருகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை விரைவில் முழுவதுமாக நிரம்ப உள்ள நிலையில் இருப்பதால் தற்போது ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வேலூர் மாவட்டத்தின் எல்லையில் தற்போது புகுந்துள்ள நீர் விரைவில் பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தாசில்தார் பாலமுருகன் கூறியுள்ளார். எனவே பொன்னை ஆற்றங்கரை அருகில் இருக்கும் கிராம மக்கள் ஆற்றுப் பகுதியில் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என்று தாசில்தார் பாலமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து வருவாய் துறையினர் தண்டோரா மற்றும் ஆட்டோக்கள் மூலம்  பொதுமக்களுக்கு தகவலை பரப்பி வருவதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு பொன்னை ஆற்றில் வெள்ளம் வருவதனால் விவசாய பாசனம் பெறும் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |