ஈராக் நாட்டின் பிரதமரான முஸ்தபா அல்கதிமை கொல்வதற்காக நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஈராக் நாட்டில் கடந்தாண்டு முதல் முஸ்தபா அல் கதிமி என்பவர் பிரதமர் பொறுப்பை வகிக்கிறார். இந்நிலையில் ஈராக் நாட்டின் பிரதமரான முஸ்தபா அல் கதிமியை கொல்லும் முயற்சியில் ஏதோ ஒரு போராளி குழுவினர்கள் அவரது இல்லத்தின் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இவ்வாறு ஈராக் நாட்டின் பிரதமர் வீட்டில் நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலில் அங்கிருந்த சுமார் 7 பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள்.
இதனையடுத்து ஈராக் நாட்டின் பிரதமரான முஸ்தபா அல்கதிமியை கொலைசெய்யும் முயற்சியில் அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.