Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னோட கேம் ஐடியில் விளையாடக்கூடாது… இருவருக்கு கத்திக்குத்து… போலீஸ் வழக்குப்பதிவு…!!

செல்போன் விளையாட்டில் ஐடியை பரிமாறிக் கொண்டதற்காக 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் வசித்து வருபவர் குருநாதன். இவருடைய மகன் மாற்றுத்திறனாளியான சூர்யா. இவர் தனது செல்போனில் ஒரு கேம்  டவுன்லோட் செய்து விளையாடியுள்ளார். அதற்கான ஐடியை தனது நண்பரான  லிங்கராஜாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் லிங்கராஜா விளையாடிவிட்டு அதே பகுதியில் வசித்து வரும் நவீன் என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சூர்யா நவீனை அழைத்து தனது ஐடியை பயன்படுத்தக்கூடாது என கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த முற்றிய நிலையில் நவீன் தனது நண்பரான சூரியபிரகாஷ் என்பவரை அழைத்துக்கொண்டு சூர்யாவின் வீட்டிற்கு வந்து அவரைக் கீழே இழுத்துப் போட்டு அடித்துள்ளனர். இதனை அறிந்த சூர்யாவின் நண்பர்கள் ஓடிவந்து நவீன் மற்றும் அவரது நண்பருடன் தகராறில் ஈடுபட்டு அருகில் கிடந்த கத்தியை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன் மற்றும் சூரியபிரகாஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் நவீன் அளித்த புகாரின் பேரில் சூர்யா தரப்பில் உள்ள 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யா அளித்த புகாரின் பேரில் நவீன் தரப்பில் இருக்கும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |