தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவனை சிறார் சிறையில் அடைத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இட தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருக்கும்போது 18 வயது சிறுவன் ஒருவன் இட தகராறு காரணமாக காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மாரிமுத்துவின் முதுகில் குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து அவர்கள் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல்துறையினர் சிறுவனை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.