வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள யானைகல் பகுதியில் வேர்க்கடலை வியாபாரம் கடை வைத்து நடத்தி வருபவர் தாத்து பெருமாள். இவருக்கும் பக்கத்தில் உள்ள கடைக்காரரான கோகுல ராமன் மற்றும் சுருளி கோவிந்தம் ஆகியோருக்கும் இடையே வியாபாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ஏற்பட்ட தகராறில் கோகுல ராமனும் சுருளி கோவிந்தனும் இணைந்து தாத்து பெருமாளை திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தாத்து பெருமாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோகுல ராமனையும் சுருளி கோவிந்தனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.