Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சொத்து பிரிச்சு தாங்க… மகன் செய்த செயல்… வளர்ப்பு தந்தைக்கு ஏற்பட்ட நிலை…!!

சொத்துக்காக வளர்ப்புத் தந்தையை தாக்கி விட்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி பகுதியை சார்ந்தவர் கோவி மணி. இவர் தனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தனது உறவினர் மகனான ராஜ் என்பவரை எடுத்து வளர்த்து வந்துள்ளார். ராஜ்க்கு தற்போது திருமணமாகி நீண்டமங்களத்தில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனது வளர்ப்புத் தந்தையிடம் வந்து சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கோவி மணி பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார்.

இதனை ஏற்காத ராஜ் கோவி மணியை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அருகில் கிடந்த கம்பை எடுத்து பலமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கோவி மணி திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோவி மணி கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ராஜை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |