அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் நடந்ததில் ஒரு நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சூதாட்ட விடுதியின் முன்புறத்தில் நேற்று காலையில் திடீரென்று கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஒரு நபர் பலியானதாகவும் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து சூதாட்ட விடுதிக்கு முன்புறம் ஆடைகளில் அதிக அளவு ரத்தத்துடன் சென்ற ஒரு நபரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சாலைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.