பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் உட்பட 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பர்கினோ பசோ, மாலி மற்றும் நைஜீரியா நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கிறது. இங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, தீவிரவாத தாக்குதல்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள சமண்டென்ஹா என்ற மாகாணத்தின் ராணுவ முகாமிற்கு அருகில் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 9 வீரர்கள் உட்பட 19 நபர்கள் பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.