காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ஐ.நாவின் அமைதி காப்பாளர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பல பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
காங்கோ நாட்டில் பல வருடங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதலில் மக்கள் பலர் பலியாகியுள்ளனர். இதனை தடுத்து ஐ.நா அமைதி காப்பாளர்கள் குழு மக்களை காக்கவில்லை என்று ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதில், ஐ.நா அமைதி காப்பாளர்கள் மூவர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சர்வதேச அளவில் அதிக கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், ஐ.நா அமைதி காப்பாளர்கள் விடுமுறைக்கு பின் பணியை மேற்கொள்ள நாட்டிற்கு திரும்பிய போது நாட்டின் எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கசிந்தி என்னும் இடத்தை சேர்ந்த மக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டிருக்கிறது. வீரர்கள் எதற்காக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள்? என்பதற்கான காரணம் தெரியவில்லை.