பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்டாவின் மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றின் மேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற இத்தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்புகள் எதுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.