தலீபான்களின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த மாதம் 15ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் அவர்களுக்கு எதிராக சில கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரும் ஒருவர்.
இந்த நிலையில் ஜலாலாபாத்தில் மாவட்டத்தில் உள்ள சோதனை மையத்தின் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலீபான்களின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு தலீபான்கள் மற்றும் ஒரு பொதுமக்கள் என மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து தலீபான்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரா அல்லது வேறு ஏதேனும் கிளர்ச்சியாளர்கள் செய்தார்களா என்பது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை.