Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திட்ட அலுவலர் மீது தாக்குதல்…… சேலத்தில் பரபரப்பு….!!

சேலம்  மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட உதவி திட்ட  அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுது தாக்கப்பட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேச்சூரி என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட உதவியாளர் சுசிலா ராணி  உள்ளிட்டோர் டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

Image result for Attack on Dengue Awareness Project Officer

அப்போது பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூறி பிரபாகரன் என்பவர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுசிலா ராணியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுசிலா ராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை  தொடர்ந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |