தமிழக உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் விருவிருப்பாக தேர்தல் பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்று இருந்தார் .அப்போது மக்களை சந்தித்து சந்தித்து விட்டு புறப்பட தயாராக இருந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை காரை நோக்கித் தள்ளியதில் அவருடைய இடது காலில் அடிபட்டது. இதனால் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மம்தா, இது திட்டமிடப்பட்ட சதி என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் காவல்துறையினர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இதற்கான விரிவான அறிக்கை அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாஜக விமர்சனம் செய்த நிலையில், மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மம்தா மீதான தாக்குதல் தலைகுனிய வைக்கும் தாக்குதல். இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதற்கு காவல்துறையினரும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்