லிதுவேனியா நாட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் அகதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்குள் தஞ்சம் புகுவதற்காக அகதிகள், பெலாரஸ் மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளின் எல்லையில் முகாமிட்டு தங்கியுள்ளனர். இரவு நேரத்தில் கடுமையான குளிர் இருந்ததால், அவர்கள், ஸ்லீப்பிங் பேகில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பாதுகாப்பு படைவீரர்கள், அவர்களை நாயை விட்டு கடிக்க விட்டதோடு, கற்களை தூக்கி எறிந்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானதை தொடர்ந்து, பாதுகாப்பு வீரர்கள் செயலுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு படையினர், மனிதர்கள் தூங்கிக்கொண்டிருந்தது தங்களுக்கு தெரியாது என்றும், நாய் கடித்ததால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.