Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமானத்தளத்தில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்…. வெளியான பரபரப்பு வீடியோ…!!!

கிரிமியன் தீபகற்பத்தில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விமானத்தளத்தில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யா கைப்பற்றிய கிரிமியன் விமான தளத்தில் தொடர்ந்து பயங்கர வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அந்த தீபகற்பத்தில் இருக்கும் கடலோர ரிசார்டுகளுக்கு அருகே அமைந்துள்ள ரஷ்யாவின் விமான தளத்தை குறிவைத்து தொடர்ந்து மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது.

இதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் வானுயரத்திற்கு புகை மூட்டம் காணப்பட்டது. உக்ரைன் நாட்டிலிருந்து அதிக தொலைவிற்கு செல்லக்கூடிய ஏவுகணைகள் ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமானது, சேமிக்கப்பட்டிருந்த வெடி மருந்துகளை வெடிக்க செய்த போது இவ்வாறு நடந்திருக்கிறது, இது தாக்குதல்களால் நடந்தது இல்லை என்று கூறியிருக்கிறது. மேலும், இந்த தாக்குதலால் விமான உபகரணங்களில் எந்தவித சேதங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |