Categories
உலக செய்திகள்

ரஷ்யத்தாக்குதல்…. குழந்தைகள் உட்பட 23 பேர் பலி… உலக நாடுகள் கண்டனம்…!!!

உக்ரைன் நாட்டின் வின்னிட்சியாஎன்ற பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் வின்னிட்சியா பகுதியில் திடீரென்று வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதில், மருத்துவமனைகள், கலாச்சார மையம் மற்றும் வீடுகள் தகர்க்கப்பட்டன. மேலும், குழந்தைகள் மூன்று பேர் உட்பட 23 நபர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இது போர் குற்றம் என்றும் கண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து ரஷ்யா கூறுகையில் மக்கள் வாழும் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

உக்ரைன் படையினர், ஆயுதங்கள் பெற பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கட்டிடத்தை குறி வைத்துதான் தாக்குதல் மேற்கொண்டோம் என்று கூறியுள்ளது. ஆனால் இதை முற்றிலுமாக மறுக்கும் உக்ரைன், திட்டமிட்டு மக்களை கொலை செய்ய இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறியிருக்கிறது.

Categories

Tech |