பிரான்சில் சுத்தியலால் அடித்ததால் கோமா நிலைக்கு சென்ற மாணவனுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று செயிண்ட் மைக்கேல் சூர் ஓர்ஜ்-ல் இருக்கும் லெஓனர்ட் தே வின்சி லிசேயின் வாயிலில் நடந்த பயங்கர குழு மோதலில் 15 வயது சிறுவன் ஒருவன் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தான். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த சிறுவன் மருத்துவமனையில் செயற்கை கோமா நிலையில் இருப்பதாகவும், ஆபத்தான கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினரும், அரசாங்கமும், மாணவனின் தந்தையும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. பள்ளிகள் முன்னால் மாணவர்கள் இந்த 21-ம் நூற்றாண்டில் வன்முறையில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த சிறுவனை சக மாணவர்களில் ஒருவன் வெள்ளை துணியால் சிறுவனுடைய தலையை கட்டி முதலுதவி அளித்துள்ளான். ஆனால் அந்த மாணவனை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.