Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த கரடி…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

அட்டகாசம் செய்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து விட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் வளம் மீட்பு பூங்கா இருக்கின்றது. கடந்த சில நாட்களாக இந்த பூங்கா வளாகத்தில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதனால் அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தூய்மை பணியாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி அங்குள்ள சாலையோரத்தில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த கூண்டில் இருக்கும் பழங்களை தின்பதற்காக சென்ற போது கரடி சிக்கிக்கொண்டது. இதனையடுத்து கூண்டில் இருந்து வெளியே வர முடியாமல் ஆக்ரோஷத்துடன் கத்திய கரடியை பார்ப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டுடன் கரடியை சரக்கு வாகனத்தில் ஏற்றி அப்பர் பவானி அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

 

Categories

Tech |